'நம்மவர் படிப்பகங்கள்' திறப்பு விழா மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் வாழ்த்து.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வேந்தோணி கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 'நம்மவர் படிப்பகங்கள்' திறப்பு விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் படிப்பகங்களை உருவாக்கிய கமல் பண்பாட்டு மையம் மற்றும் வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம் ஆகிய அமைப்புகளுக்கும், ஒத்துழைப்பு நல்கிய கல்லூரணி, வேந்தோணி கிராம மக்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இந்தப் படிப்பகத்தை இளைஞர்களும், மாணவர்களும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்த நிலைகளை எட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#நம்மவர்_படிப்பகம்
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1883489817553764648
Facebook: https://www.facebook.com/share/v/1Ekb8Pe22m/
Instagram: https://www.instagram.com/reel/DFSd3GGqTy-/?utm_source=ig_web_copy_link