நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத் திறப்பு விழா.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் கட்சி அலுவலகத் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
கட்சியின் உதகமண்டலம் மநீம மாவட்டச் செயலாளர் திரு. H.ஜாகிர்ஹாசன் தலைமை வகித்தார். கோவை மண்டலச் செயலாளர் திரு. A.ரங்கநாதன் முன்னிலை வகித்தார். எடக்காடு கிளை அலுவலகத்தை கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் திறந்துவைத்தார். கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அங்குள்ள அரசுப் பள்ளியில் 8 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றியச் செயலாளர் திரு. ரமேஷ், வட்டச் செயலாளர் திரு. கமர்தீன் ஆகியோர் செய்திருந்தனர்.
இவ்விழாவில், மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. தாஜுதீன், கோவை மாவட்டச் செயலாளர்கள் திரு. மயில் கணேஷ், திரு. வரதராஜ், திரு. முஜிபுர், நிர்வாகிகள் திரு. சத்தியநாராயணன், திரு. சிராஜ், திரு. ஜெய்கணேஷ், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ரவி, உதகையைச் சேர்ந்த திரு. செல்வம், திரு. வினோத், திரு. ரவி, திரு. டோம்னிக், திரு. சாலமன் சார்லஸ், திரு. பிரதீப்குமார், திருமதி ஜெம்ஷீலா, திரு. காஜா ஷெரீப் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1911366018741522691
Facebook: https://www.facebook.com/share/p/15zJSBRrtd/
Instagram: https://www.instagram.com/p/DIYif4bpNyF/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==