ஆர்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி, மநீம பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தலைவர் நம்மவர் சார்பில் மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார். மாணவரணி மாநிலச் செயாலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், செயற்குழு உறுப்பினர் திருமதி.சினேகா மோகன்தாஸ், துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன் மற்றும் மய்ய நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் திருமதி. கனிமொழி அவர்கள், திக தலைவர் கி.வீரமணி அவர்கள், மதிமுக தலைவர் திரு. வைகோ அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் திரு. கே.பாலகிருஷ்ணன் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு. இரா.முத்தரசன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள், மமக தலைவர் திரு.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள், கொமதேக தலைவர் திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பிரதிநிதிகள் கண்டன உரையாற்றினர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1846444573750424042
Instagram: https://www.instagram.com/p/DBLQBpBJhN0/?utm_source=ig_web_copy_link