கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், கழிப்பறை, சாலை, பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் நீண்டகாலமாக பரிதவித்து வந்தனர்.
இதையறிந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சிட்கோ சிவா, நகரச் செயலாளர்கள் தாஜுதீன், வினோபா ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பழங்குடியின மக்களின் இன்னல்கள் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டுசென்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர் நடவடிக்கைகளால் அப்பகுதியில் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டது. மேலும், அங்கு தினமும் குப்பை அகற்றப்படுகிறது. அங்குள்ள பள்ளியை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றன.
மக்கள் பிரச்னைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அவற்றைத் தீர்க்க தொடர் முயற்சிகளை மேற்கொண்ட மநீம மாவட்டச் செயலாளர் திரு. சிட்கோ சிவா, நகரச் செயலாளர்கள் திரு. தாஜுதீன், திரு. வினோபா மற்றும் அனைத்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள்.
அதேபோல, கோண்டி காலனியைச் சேர்ந்த பழங்குடி மக்களின் குறைகளை களைய நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்திய அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
`மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பொதுமக்கள் பிரச்னைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அவற்றைக் களையும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்' என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சித் தலைவர் நம்மவரின் வழியில் மக்கள் பணி தொடருவோம்!.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1842438739085427115
Facebook: https://www.facebook.com/share/p/4QZMSib2fE64JRp6/
Instagram: https://www.instagram.com/p/DAuygWTJkaL/?utm_source=ig_web_copy_link