மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் நியமன அறிவிப்பு.

3 November 2024

                `

மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் நியமன அறிவிப்பு.

உயிரே உறவே தமிழே!

வணக்கம்!

அரசியல் களத்தில் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு முழுவீச்சுடன் நாம் தயாராகிவரும் வேளை இது. கட்சியில் நடைபெற்றுவரும் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், களப்பணிகள், கொடியேற்றம், முகாம்கள் போன்றவை இன்னும் பன்மடங்கு வேகத்தோடு பெருகவேண்டும் என்பதை நாம் உணரவேண்டிய உச்ச தருணம் இது.

மய்ய நிர்வாகிகள் ஒவ்வொருவரின் பணியையும் நேரடியாக அவதானித்து, சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு உரிய பொறுப்பு வழங்க முடிவு செய்து கீழ்க்கண்ட நியமனங்களை அறிவிக்கிறேன். தங்களது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினால் இப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது "அலங்காரப் பதவியல்ல". மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பை மேலும் வலுவாக்கி அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய வழங்கப்பட்டுள்ள "பெரும் பொறுப்பு" என்பதை ஒவ்வொரு நிர்வாகியும் உணரவேண்டும்.

"மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் களப்பணி மூலம் மக்கள் நலப்பணி செய்வதில் வல்லவர்கள்" என்று சமீபத்தில் நடந்த நமது பொதுக்குழுக் கூட்டத்தில் நான் வலியுறுத்திப் பேசியதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் வழியாக நமது நிர்வாகிகளின் களப்பணி குறித்து நான் கேட்க விரும்பும் நற்செய்தி இதுவே.

களத்தில் உங்கள் உழைப்பைக் காட்டுங்கள். உழைத்தோருக்கு உரிய பொறுப்பு கட்டாயம் வந்து சேரும். இன்று அறிவிக்கப்பட்டுள்ள மாநில-மண்டல-மாவட்ட நிர்வாகிகளுக்கு, கட்சியினர் அனைவரும் உச்சபட்ச ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். கூட்டு முயற்சியே சாதனைகளின் முதற்படி என்பதை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுங்கள். மக்கள் நீதி மய்யம் முழு விசையுடன் புதிய உயரங்களை எட்டட்டும்.

நாளை நமதே!

உங்கள் நான்,

கமல் ஹாசன்
தலைவர் - மக்கள் நீதி மய்யம்.

@ikamalhaasan

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1853086493881012357

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid02VwTzy1NhQEHtck6Y4R9NiXWXH5ZFD3kwkvGhtTNCZ4VfsGTPMiWMPbWVs5V5Zrpfl

Instagram: https://www.instagram.com/p/DB6ct9xPzco/?utm_source=ig_web_copy_link

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post