மக்கள் நீதி மய்யம் காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் தொடர் மருத்துவ முகாம்.

13 December 2023

                `

கடந்த 3 ம் தேதி சென்னையை தாக்கிய மிக் ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்கள் மெல்லமெல்ல மீண்டுவரும் சூழ்நிலையில், 

புயல் மற்றும் சூழ்ந்த வெள்ளத்தின் பக்கவிளைவாக நோய் தொற்று உருவாகும் ஆபத்தை கருத்தில் கொண்டு, 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் ஆலோசனையின் பேரில், 

தொடர் மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்து, 

நேற்று 11.12.2023 முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர் மருத்துவ முகாம் நடத்தி வருகிறது.

இந்த மருத்துவ முகாம்களை, நகரின் பிரதான மருத்துவமனையான காவேரி மருத்துவமனையுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்துகிறது.

இந்த மருத்துவ முகாம்களை தொடர்ந்து 7 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடர் மருத்துவ முகாம் திட்டத்தை, கட்சியின் மாநில தொழில் முனைவோர் அணியின் ஒருங்கிணைப்பாளர் திரு. மயில்வாகனன் அந்தந்த பகுதி மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளோடுஇணைந்து ஒருங்கிணைக்கிறார்.

நடந்த மற்றும் நடக்கவிருக்கும் இடங்கள் : 

நாள் 1 : 11.12.2023
இடம் : வார்டு எண் 77, பேஷன் ப்ரிட்ஜ் காவல் நிலையம் அருகில், புளியந்தோப்பு.
இடம் : வார்டு எண் 4, அத்திப்பட்டு புதுநகர், மீஞ்சூர், பொன்னேரி.

நாள் 2 : 12.12.2023
இடம் : பழவேற்காடு லைட் ஹவுஸ் 
இடம் : குணங்குப்பம்

நாள் 3 : 13.12.2023
இடம் : வார்டு எண் 13, ஜாஃபர்கான்பேட்டை, சூளைப்பள்ளம்.
இடம் : வார்டு எண் 138, அஞ்சலி மஹால், எம்.ஜி.ஆர்.நகர்

நாள் 4 : 14.12.2023
இடம் : மயிலாப்பூர்

நாள் 5 : 15.12.2023
இடம் : மேட்டுக்குப்பம் ஜங்ஷன், வானகரம்.

நாள் 6 : 16.12.2023
இடம் : பெத்தேல் நகர், ஈஞ்சம்பாக்கம்.

நாள் 7 : 17.12.2023
இடம் : அம்பேத்கர் நகர், வேளச்சேரி.

Download PDF

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post