வணக்கம்
இன்று (25.08.2024) காலை 11.30 அளவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள, நம்மவருக்கு அழைப்பு வந்தபோது, நம்மவர் பல்வேறு பணிகளால் கலந்துகொள்ள முடியாமல் போனதால், இன்று முதல்வரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை, முதல்வரிடமிருந்து நம்மவர் பெற்றுக்கொண்டார்.
மேலும், முதல்வர் அவர்கள் விரைவில் செல்லவிருக்கும் அமெரிக்க பயணத்திற்கு, நம்மவர் திரு. கமல் ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.
நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் MA., BL., அவர்கள் உடனிருந்தார்.
-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.