மக்கள் நீதி மய்யம் 8-ம் ஆண்டு தொடக்க விழா!
கட்சித் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றுகிறார் !
அனைவருக்கும் வணக்கம்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவானது 21-02-2025 (வெள்ளிக்கிழமை) அன்று விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.
தனது கொள்கையில் இருந்து சிறிதும் விலகாமல், தலைவர் காட்டும் பாதையில் பயணித்து, அரசியலில் பீடுநடை போட்டுவரும் மக்கள் நீதி மய்யத்துக்கு நடப்பாண்டும், வரும் ஆண்டும் வரலாற்றுத் திருப்புமுனைகளாக மாற உள்ளன.
மண், மொழி, மக்களைக் காக்கும் விஷயங்களில் சிறிதும் சமரசமின்றி, தொடர்ந்து களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் 8-ம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாட உள்ளோம்.
நமது கட்சி துவங்கிய நாள் மற்றும் உலகத் தாய்மொழிகள் தினமான பிப்ரவரி 21-ம் தேதி மாலை 3 மணியளவில், சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்களிடையே எழுச்சி உரையாற்றுகிறார்.
இவ்விழாவில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மநீம உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைத் தவிர்த்து இதர மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், அவரவர் சார்ந்த மாவட்டம் மற்றும் தொகுதி அலுவலகங்களில் கட்சிக் கொடியேற்றியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் 8-ம் ஆண்டுத் தொடக்க விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி! நாளை நமதே!!
ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.