மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூர் தொகுதியில் இ-சேவைகள் முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, எழும்பூர் தொகுதி புளியந்தோப்பு மோதிலால் நேரு தெருவில் இலவச கண் பரிசோதனை முகாம், இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்பேரில், தரவுகள் மற்றும் ஆய்வு அணி மாநில துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் திரு. ராமச்சந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. கருணா, திரு. சித்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், இ-சேவைகள், கடனுதவி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.
முகாமில் கட்சியின் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், நற்பணி அணி நிர்வாகி திரு. கருணா, வட்டச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர்கள் திரு. லோகநாதன், திருமதி. சிந்தனைச்செல்வி, திருமதி. அனிதா, திருமதி. சுகன்யா, உறுப்பினர் திருமதி. ஜோஸ்பின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1904418146112663783
Facebook: https://www.facebook.com/share/p/1YiVhEARZo/
Instagram: https://www.instagram.com/p/DHnLDjaJKoM/?utm_source=ig_web_copy_link