மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்நிறுத்தி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின் பேரில், திரு.வி.க. நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக சமூக ஊடக அணியின் மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மண் மற்றும் மாவட்ட அமைப்பாளர் திருமதி. பிரிசில்டா நான்சி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் திரு. சின்னதுரை, நகரச் செயலாளர் திரு. சாமி வேலா, வட்டச் செயலாளர்கள் திரு. சக்திவேல், திரு. பிரசாந்த், திரு. முகமது மஜித், திரு. பிரபாகரன், திரு. கார்த்திக், திரு. பிரேம், திரு. சண்முகம், திரு. ஆனந்த், திரு. துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம், கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட முக்கிய கள செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1901873020010123728
Facebook: https://www.facebook.com/share/p/1YyCD5vHSY/
Instagram: https://www.instagram.com/p/DHVFlbOJVtp/?utm_source=ig_web_copy_link