அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது எண்ணத்துக்கு வடிவம் கொடுப்பது ‘நம்மவர் படிப்பகம்’ ஆகும்.
ஏற்கெனவே மதுரை மலைச்சாமிபுரத்தில் நம்மவர் படிப்பகம் மிகச் சிறப்பாகவும், அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நம்மவர் படிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம் மற்றும் கமல் பண்பாட்டு மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நம்மவர் படிப்பகங்கள், திறப்பு விழா வரும் 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பரமக்குடியில் காலை 10 மணியளவிலும், அருப்புக்கோட்டையில் மாலை 5 மணியளவிலும் நடைபெற உள்ளது.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான புத்தகங்கள், நம்மவர் படிப்பகத்தில் தனித்தனி பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. அதேபோல, டிஜிட்டல் நூலகத்துடன் அமைந்த திறன் மேம்பாட்டு மையமாகவும் நம்மவர் படிப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல வெளிச்சம், காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ள நம்மவர் படிப்பகத்தில், பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் அமர்ந்து படிக்க தனித்தனியே மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதிகளும் உள்ளன.
தமிழகம் முழுவதும் நம்மவர் படிப்பகங்களை உருவாக்குவதே லட்சியம் என்று தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்
தெரிவித்துள்ள நிலையில், இதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் கமல் பண்பாட்டு மையம் மற்றும் வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதேபோல, அனைத்து ஊர்களிலும் நம்மவர் படிப்பகங்கள் உருவாகி, ஆற்றல் மிக்க, திறன்மிகுந்த எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.
ஆ. அருணாச்சலம் MA., BL.,
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1880600171727434120
Facebook: https://www.facebook.com/share/p/1BGYagEJCp/
Instagram: https://www.instagram.com/p/DE970jLpGSQ/