மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா, தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது 70-வது பிறந்த நாள் விழா மற்றும் மகளிர் தின விழா ஆகிய முப்பெரும் விழா நெல்லையில் விமரிசையாக நடைபெற்றது.
கட்சியின் துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர். வைத்தீஸ்வரன் முன்னிலையில், நெல்லை மண்டலச் செயலாளர் டாக்டர். பிரேம்நாத் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டலப் பொறியாளர் அணி அமைப்பாளர் திரு. ஜிம்மி போன்சன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் திரு. மதன், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் திரு. சார்லஸ், திரு. நிஜாம், மானூர் ஒன்றிய அமைப்பாளர் திரு. ஆறுமுகம் மற்றும் நெல்லை மண்டலத்தைச் சார்ந்த பொறியாளர் அணியினர் செய்திருந்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக விவசாய அணி மாநிலச் செயலாளர் டாக்டர். ஜி.மயில்சாமி, மதுரை மண்டல செயலாளர் திரு. அழகர், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர்செல்வம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர், விவசாய அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. பிரேம்குமார் பர்னா, சமூக ஊடக அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. மூர்த்தி சிவா, மகளிரணி நெல்லை மண்டல அமைப்பாளர் திருமதி. செல்வி, வழக்கறிஞர் அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. ரமேஷ், இளைஞர் அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. கணேஷ் குமார், மகளிரணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன், இளைஞரணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. பரணிகுமார், விவசாய அணி மதுரை மண்டல அமைப்பாளர் திரு. முத்துக்கருப்பன், பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சரவணகுமார், நெல்லை மற்றும் மதுரை மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பளர்கள் மற்றும் நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1898663585548824962
Instagram: https://www.instagram.com/p/DG-SgtQpD_b/?utm_source=ig_web_copy_link