மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி, எழும்பூர் தொகுதி 61-வது வார்டு புதுப்பேட்டை பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம், கடனுதவி ஆலோசனைகள், இ-சேவைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் தரவு மற்றும் ஆய்வு மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சீனிவாசன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. வெங்கடேஸ்வரி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இம்முகாமுக்கான ஏற்பாடுகளை மாவட்டப் பொருளாளர் திரு. ஜாபர் அலி, வட்டச் செயலாளர்கள் திரு. ஸ்ரீதர், திரு. ரவி ஆகியோர் செய்திருந்தனர்.
முகாமில் நகர செயலாளர்கள் திரு. கமல், திரு. ராமச்சந்திரன், வட்ட செயலாளர்கள் திரு. கருணா, திரு. சித்திக், திரு. சுதாகர், திரு. லாரன்ஸ், திருமதி. சுப்புலட்சுமி, கிளை செயலாளர்கள் திரு. சத்திஸ்குமார், திரு. அப்ரோஸ், திருமதி. பௌசி பானு, திரு. ரஞ்ஜித்குமார், திருமதி. சிந்தனைச் செல்வி மற்றும் உறுப்பினர்கள் திரு. தாவுத், திரு. சூரியகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தேவையான உதவிகளைப் பெற்றனர். மேலும், பல்வேறு விவரங்களையும் கேட்டறிந்தனர். கட்சியில் 30 பேர் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1898994322214883409
Facebook: https://www.facebook.com/share/p/187kiscug6/
Instagram: https://www.instagram.com/p/DHAoVmzp9rT/?utm_source=ig_web_copy_link