மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கோவை தெற்கு தொகுதி சார்பில் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய மாநகர அலுவலகம் திறப்பு விழா கோவை, சுங்கம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் அவர்கள் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.
மாவட்டச் செயலாளர் திரு. பிரபு அவர்கள் முன்னிலையில், மாநகரச் செயலாளர் திருமதி. மணிக்கொடி அவர்கள் வரவேற்றார்.
விழாவில் கோவையின் நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. முகமது சித்திக், ஊடகம் & செய்தித்தொடர்பு மண்டல அமைப்பாளர் திரு. செவ்வேல், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன், பயிற்சி பட்டறை அணி மண்டல அமைப்பாளர் திரு. ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்கள் திரு. சிட்கோ சிவா, திரு. மயில்கணேஷ், திரு. மோகன்ராஜ், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. கார்த்திக், திருமதி சாந்தி, திரு. வெங்கட்ராஜ், திரு. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. கார்கில் கார்த்திகேயன், திரு. சத்தியநாரயணன், பொருளாளர் திரு. சிராஜுதீன், மாநகரச் செயலாளர்கள் திரு. சரவணா, திரு. பூபதிராஜ், வார்டு செயலாளர்கள் திரு. ஆனந்தராஜ், திரு. ஆனந்தகுமார், திரு. ராஜ கன்னியப்பன், திரு. ஓஸ்மின் ராஜா, திரு. தீனா, திரு. கார்த்திகேயன் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வார்டு செயலாளர் திரு. விஸ்வநாதன் நன்றி கூறினார்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1901646008775541002
Instagram: https://www.instagram.com/p/DHTeq7Jye3p/?igsh=MXdzcnllMGN3cWkyeA==