மக்கள் நீதி மய்யம் சார்பில் பெரம்பூரில் இ-சேவைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் பெரம்பூர் மநீம மாவட்டம் சார்பில் சென்னை மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட வாசுகி நகர் பூங்கா பகுதியில் இலவச இ-சேவை மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் தலைமை வகித்தார். முகாமுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு. V.உதயகுமார் செய்திருந்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் ஆகியோர் பங்கேற்று, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
முகாமில் அரசின் சிறுதொழில் கடனுதவி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், வங்கிக் கடனுதவி, தொழிலாளர் நல வாரியத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பான இ-சேவைகள் வழங்கப்பட்டதுடன், கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.
மேலும், கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர், மோர், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. P.சரவணகுமார், மாவட்டச் செயலாளர்கள் திரு. கோவிந்தராஜ், திரு. பாலமுருகன், மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி. நான்சி, திரு. ஞானம், திரு. R.T.பாலாஜி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. சின்னதுரை, திரு. கணேசன், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் திரு. சண்முகம், திரு. விக்னேஷ், திரு. யுவராஜ், திரு. ராஜாபுத்திரன், நகர செயலாளர்கள் திருமதி. ரேவதி, திரு. தரம் குமார், திரு. வாசன், திரு. ரமேஷ், திரு. வேலா, நகர அமைப்பாளர்கள் திருமதி. மாலா, திருமதி. காதம்பரி, வட்ட செயலாளர்கள் திரு. ஜானகிராமன், திரு. R.K.கார்த்திக், திரு. S.கார்த்திக், திரு. செந்தில் நாராயணன், திரு. மோகன கிருஷ்ணன், திரு. ரவி ராஜேஷ், திரு. சக்திவேல், கிளை செயலாளர்கள் திரு. ஆனந்த், திரு. ராஜ்கமல், திரு. ஜெயராம், திரு. கணேஷ் குமார், திரு. பத்மநாபன், திரு. தேவராஜ், திரு. நாகமணிகண்டன், திரு. ரவி, திரு. பத்மநாபன், திரு. மைதீன் ஷெரிய்ப், திரு. ஐயப்பன், திரு. கோபு, திரு. மணிகண்டன், திரு. வெற்றி செல்வா, திரு. முருகவேள், திரு. கமலக்கண்ணன், திரு. சிவா, திரு. தியாகு, திரு. பால் கிறிஸ்டின், திரு. வினோத் குமார், திரு. அபிஷித், திரு. குமரேசன், திரு. ஸ்ரீதர், திரு. ஸ்ரீபாபு, திரு. ஆலன் துரை, திரு. விநாயக மூர்த்தி, திரு. முகமத் ராசிக், திரு. விக்ரம், திருமதி. முனியம்மாள், திருமதி. அனிதா மேரி, திருமதி. பர்கத், திருமதி. ராதா, திருமதி. செல்வி, திருமதி. ஜெயஸ்ரீ, திருமதி. ஜானகி, திருமதி. ஆயிஷா கனி, திருமதி. லலிதா, திருமதி. அம்மு, திருமதி. ஷாந்தி, திருமதி. புவனேஸ்வரி, திருமதி. லட்சுமி, திருமதி. கிருஷ்ணவேணி, திருமதி. கற்பகம், திருமதி. நாகம்மா, திருமதி. ஹேமமாலினி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பொது மக்களுக்கு தேவையான தகவல்களையும், உதவிகளையும் வழங்கினர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1909553612092850503
Facebook: https://www.facebook.com/share/p/1AVjmEq3jZ/
Instagram: https://www.instagram.com/p/DILqFAYJuJO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==