கோவையில் மக்கள் நீதி மய்யம் 8-ம் ஆண்டு தொடக்க விழா, புதிய அலுவலகம் திறப்பு, கட்சிக் கொடியேற்று விழா!
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மநீம மாவட்டம் சார்பில் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா, புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கட்சிக் கொடியேற்று விழா கோவை வடவள்ளியில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் திரு. தனவேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. ஆனந்த், திரு. மாரியப்பன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் புதிய அலுவலகத்தை திறந்துவைத்தார். கோவை மண்டலச் செயலாளர் திரு. A. ரங்கநாதன் அவர்கள் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி மூகாம்பிகா ரத்தினம் அவர்கள் கட்சியின் பெயர்ப் பலகையைத் திறந்துவைத்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. சித்திக், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மண்டல அமைப்பாளர் திரு. செவ்வேள், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன், பயிற்சி பட்டறை அணி மண்டல அமைப்பாளர் திரு. ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு, திரு. சிட்கோ சிவா, திரு. மனோகரன், திரு. மோகன்ராஜ், திரு. மயில் கணேஷ், திரு. வரதராஜ் மற்றும் திரு. செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட நகரச் செயலாளர்கள் திரு. தண்டபாணி, திரு. பாபு, திருமதி. சாந்தி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. முத்துமாரி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. பாலமணிகண்டன், வார்டு செயலாளர்கள் திரு. ரஞ்சித், திரு. மோகன்ராஜ், திரு. மோகன், திருமதி. ஹம்சமித்ரா, திரு. மதியழகன், திரு. செல்வராஜ், திரு. ராஜேஷ், திரு. ராதாகிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் திரு. செல்லதுரை, திரு. ஆறுமுகம், திருமதி. சாருலதா மற்றும் திரு. சத்திய நாராயணன், திரு. சிராஜுதீன், திரு. ஜெய்கணேஷ், திரு. சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MNM8THYEAR
#மநீம8ம்ஆண்டு
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1893986464243073502
Facebook: https://www.facebook.com/share/p/15xEUXnohU/
Instagram: https://www.instagram.com/p/DGdDLFHpEB6/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==