மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, சென்னை எழும்பூர் மாவட்டம் 78-வது வார்டுக்கு உட்பட்ட சூளை அங்காளம்மன் கோயில் பகுதியில் இலவச கண் பரிசோதனை, இ-சேவை மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை, கட்சியின் எழும்பூர் மாவட்ட துணைச் செயலாளர் திரு. K.சீனிவாசன், வட்டச் செயலாளர் திரு. ரமேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் தரவு மற்றும் ஆய்வுகள் அணி மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சிலம்பரசன், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. அல்தாப், நகரச் செயலாளர் திரு. அமுதன், வட்டச் செயலாளர்கள் திரு. சித்திக், திரு. சுதாகர், திரு. ரவி, திரு. ஶ்ரீதர், திருமதி. சுப்புலட்சுமி, கிளைச் செயலாளர்கள் திருமதி. சிந்தனைச் செல்வி, திருமதி. அனிதா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இதில், ஏராளமானோருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டதுடன், இ-சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கட்சியில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1900853913827590317
Facebook: https://www.facebook.com/share/p/1HSFZ3wKbT/
Instagram: https://www.instagram.com/p/DHN2F93pHGS/?utm_source=ig_web_copy_link