மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் குடியரசு தினம் கொண்டாட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில், இந்தியாவின் 76-வது குடியரசு தினம் இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd) அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாநிலச் செயலாளர் திரு. அர்ஜுனர், மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி சினேகா மோகன்தாஸ் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் திரு. மாறன், திரு. கோமகன், திரு . ஓம் பிரகாஷ், திரு. தேசிங்குராஜன், திரு. J.கதிர், உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K.மாடசாமி, மாநில துணைச் செயலாளர் திரு. V.யுவராஜ், வட்டச் செயலாளர் திரு. ஃப்லாய்ட் D.க்ரூஸ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#RepublicDay
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1883501292662010308
Facebook: https://www.facebook.com/share/p/1Lc2cDwFer/
Instagram: https://www.instagram.com/p/DFSiq0hp-3r/?utm_source=ig_web_copy_link