மக்கள் நீதி மய்யம் திருப்பூர் மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திருப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மெளரியா, திரு. R.தங்கவேலு ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு கோவை மண்டலச் செயலாளர் திரு A.ரங்கநாதன், மாநிலச் செயலாளர்கள் திரு. G.மயில்சாமி, திரு. சிட்கோ A.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டுசேர்த்தல், புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில், நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. முகமது சித்திக், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன், பயிற்சி பட்டறை அணி மண்டல அமைப்பாளர் திரு. ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் திரு. ஜீவா (திருப்பூர் வடக்கு), திரு. மகேந்திரன் (திருப்பூர் தெற்கு) ஆகியோர் ஒருங்கிணைப்பில், திரு. சுரேஷ் (அவிநாசி), திரு. குரு (உடுமலைப்பேட்டை), திரு. செல்வராஜ் (காங்கயம்), திரு. ராஜா முகமது (தாராபுரம்) ஆகியோர் செய்திருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media link
Twitter: https://x.com/maiamofficial/status/1909191281810567466
Facebook: https://www.facebook.com/share/p/1VC4RBK77u/
Instagram: https://www.instagram.com/p/DIJFkafpkGs/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==