கிராம சபைகளைப் பற்றிய விழிப்புணர்வை தமிழக மக்களிடையே உருவாக்கியதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பங்கு அளப்பரியது. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தினால்தான் உண்மையான ‘பங்கேற்பு ஜனநாயகம்’ நிகழும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன்.
கிராம சபைகளைப் போலவே ஏரியா சபைகளும் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பல்வேறு களச்செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அன்று தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து ‘ஏரியா சபைகளை’ முறையாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்கள் நீதி மய்யத்தின் இடையறாத முயற்சிகளின் விளைவாக, சென்ற ஆண்டு தமிழ்நாடு அரசு ஏரியா சபைகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. தற்போது, வருடத்தில் நான்கு நாட்கள் ஏரியா சபை நடத்தும்படி சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது நமது தொடர் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறும் 'ஏரியா சபை' கூட்டங்களில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும். ஏரியா சபையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி உங்கள் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுங்கள். குறிப்பாக, உங்கள் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு ‘பங்கேற்பு ஜனநாயகம்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து தகவல்கள் சேகரித்து கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். நாம் போராடிப் பெற்றவற்றின் முழுப்பலன்களும் மக்களுக்குக் கிடைக்கும்படி செயல்படுங்களென கேட்டுக்கொள்கிறோம்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1750217549760094475?t=d17UVRWfSOpS8L0UzSawIg&s=19
Facebook: https://www.facebook.com/share/p/Z6cw3YHSd6aqYqhX/?mibextid=xfxF2i
Instagram: https://www.instagram.com/p/C2fgyEkv3Q6/?igsh=Zm10bTVxbmZzdTY3