சொந்த மண்ணிலேயே சில தெருக்களில் நடக்கக்கூடாது என்று கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லப்படும் நம் சகோதரர்களுக்கு ஓர் அநாகரிகத் தடை இருந்தது.
அதை எதிர்த்து 1924ஆம் ஆண்டில் போராட்டம் வெடித்தது. நம் தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக அப்போரில் கலந்துகொண்டார். சிறை சென்றார். தடை தகர்ந்தது. மண்ணில் மனிதர் சமமென நடைமுறை வந்தது.
அவ்வெற்றிப் போரான வைக்கம் போரின் நூற்றாண்டு நாள் இன்று. சமத்துவம் விரும்புவோர் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடுவோம். பிறரும் சமத்துவம் விரும்பத் தொடங்கும் வரை போராடுவோம்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1774050701297205530
Facebook: https://www.facebook.com/share/p/wG8qX4Vm2bzPHar3/?mibextid=qi2Omg