நாம் வரியாகச் செலுத்தும் 1 ரூபாயில் வெறும் 29 பைசாவை மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தருகிறது மத்திய அரசு. பாஜக ஆளும் மாநிலங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்தப் பணத்தைக் கொண்டு வட மாநிலங்களை முன்னேற்றி இருந்தால் கூட, ‘சரி நம் இந்தியச் சகோதரர்களுக்குத்தானே நமது பணம் போய்ச் சேருகிறது’ என சமாதானப் பட்டுக்கொள்ளலாம். அதைச் செய்யும் திறமையும் இல்லை.
ஒவ்வொரு நாளும் வாழ்வாதாரம் தேடி ஆயிரக்கணக்கான வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தபடியே இருக்கிறார்கள். எங்கள் வரிப்பணம் எங்கேதான் போகிறது எனும் கேள்வியை ஈரோடு கருங்கல்பாளையத்தில் திமுக வேட்பாளர் திரு. கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு வாக்குச் சேகரிக்கையில் கேட்டேன்.
ஏப்ரல் 19 - தேர்தல் நாளன்று உதயசூரியன் சின்னத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து ஈரோட்டு மக்களும் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.
#MakkalNeedhiMaiam
#Elections2024
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1773972995457065362?s=20
Facebook: https://www.facebook.com/share/p/WETJoSfRSnN2yVjo/?mibextid=qi2Omg