*பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனை*
*விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதா?*
*ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்போம். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்*
*துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அறிக்கை*
(15-02-2023)
குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் மும்பை, டெல்லி அலுவலங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஐ, வருமான வரி, அமலாக்கத் துறைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல.
தவறுகளை சுட்டிக் காட்டுவதும், விமர்சிப்பதும் ஊடகங்களின் பணி. அவற்றை ஏற்று, திருத்திக் கொள்வதுதான் மத்திய அரசுக்கு அழகு. அதைவிடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, விமர்சிப்போரின் குரல்வளையை நெறிக்க முற்படுவது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது.
எதிர்க்கட்சிகள், ஊடகங்களைப் பழிவாங்க அரசு அமைப்புகளைப் பயன்படுத்தும் சர்வாதிகாரப் போக்கை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த சோதனைக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!
- R. தங்கவேலு
துணைத் தலைவர்
மக்கள் நீதி மய்யம்.