வணக்கம்,
இன்று மாலை (25.03.2024) 6 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.P.K.சேகர்பாபு அவர்களும், திமுக வேட்பாளர்கள் திரு. தயாநிதி மாறன் அவர்களும், டாக்டர். கலாநிதி வீராச்சாமி அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.
இவர்களுடன், சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் திருமதி. பிரியா அவர்களும், திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் திரு. நே.சிற்றரசு அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்களும், மாநில நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
தலைவர் நம்மவர் அவர்கள் வேட்பாளர்கள் இருவரையும் தேர்தலில் வெற்றி பெற தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.