இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திரு. இரா.முத்தரசன் அவர்கள், தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார். வெளிநாடு சென்று திரும்பிய தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை, திரு. இரா.முத்தரசன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
இச்சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.