வணக்கம்.
வருங்கால சந்ததியினர் பல்வேறு நூற்களை கற்க படிப்பகங்கள் நிறைய உருவாகவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
தலைவர் அவர்களின் சிந்தனையை செயல்படுத்தும் விதமாகவும்,அவர் பெற்ற அனுபவங்களை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும்,வருங்கால இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் சக்திபடைத்த மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்காக, மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள மலைச்சாமிபுரம் கிராமத்தில் வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் மூலம் கட்டப்பட்ட, நம்மவர் படிப்பகம் என்றழைக்கப்படும் டிஜிட்டல் நூலகமானது கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
அத்திறப்பு விழாவில் உரையாடிய தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் “நீங்கள் ஒரு படிப்பகத்தை திறந்தால், நானும் ஒன்றை திறக்கிறேன்’’ என்று, தன் கட்சியினர் மற்றும் நற்பணி இயக்கத்தினரிடம் கூறினார்.
அதன்படி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை - கல்லூரணி கிராமத்தில் புதிதாக நம்மவர் படிப்பகம், வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக கட்டப்பட்டுள்ளது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கமல் பண்பாட்டு மையம் மூலமாக தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி - வேந்தோணி கிராமத்தில் நம்மவர் படிப்பகத்தை கட்டினார்.
இவ்விரு படிப்பகங்களையும் கமல் பண்பாட்டு மையத்தின் அறங்காவலர்கள் திரு.நாராயணன் வள்ளியப்பன், திரு.E.அக்பர் அலி, வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.வெங்க்கி ரங்கநாதன் ஆகிய மூவரும் இணைந்து, நாளை ஜனவரி
26ஆம் தேதி குடியரசு தினத்தன்று திறந்து வைக்கவுள்ளனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் திரு. R.தங்கவேலு, பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், ஊடகம் & செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர், நெல்லை மண்டலச் செயலாளர் டாக்டர். D.பிரேம்நாத், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. T.ஜான்சன், திரு. P.பன்னீர் செல்வம், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர். S.வைத்தீஸ்வரன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. R.லஷ்மன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் ஆகியோருடன் மய்ய நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.