மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வெளிநாடு செல்லவிருப்பதால், இன்று கட்சியின் துணைத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோருடன் ‘2024 பாராளுமன்றத் தேர்தல்’ குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பின், பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும், பிற குழுக்களை அமைப்பதற்கும் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் ‘தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவினை’ உருவாக்கியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்களான திரு. A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு), திரு. R. தங்கவேலு, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L., ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தைக் கேட்டு விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. விண்ணப்பம் செய்வதற்காகக் குறிப்பிட்டிருந்த முதல் நாளான டிசம்பர்
17-ஆம் தேதி அன்றே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தரும்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.