கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.

26 பிப்ரவரி, 2025

                `

கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா கோபிசெட்டிபாளையத்தில் விமரிசையாக நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு. சிவக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு. மயில்சாமி, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திரு. மூகாம்பிகா ரத்தினம், கோவை மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. செவ்வேள், திரு. தாஜுதீன், திரு. ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு, திரு. ஜீவா, திரு. மோகன்ராஜ், திரு. வரதராஜ், திரு. பழனிவேல், திரு. சசிகுமார், திரு. முருகன், திரு. முரளி கிருஷ்ணா, திரு. மகேந்திரன், திரு. ஜாகிர் ஹாசன், திரு. முஜிபுர் ரஹ்மான் மற்றும் திரு.செந்தாமரைக் கண்ணன், திரு. சத்தியநாராயணன், திரு. சிராஜுதீன், திரு. ஜெய்கணேஷ், திரு. சௌந்தர்ராஜன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

இதையொட்டி 3 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, ஓரிடத்தில் 8-ம் ஆண்டு தொடக்கத்தை நினைவுகூரும் வகையில் 8 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், ஆதரவற்றோர் இல்லத்தினருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நேகாஶ்ரீ அரங்கில் நடைபெற்ற விழாவில், புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. விருந்தினர்களின் சிறப்புரைக்குப் பின்னர், ஆதரவற்ற முதியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு, இரவு உணவு பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சிகளில், மக்கள் நீதி மய்யம் மாவட்டப் பொருளாளர் திரு. J.டோனி, மாவட்ட அமைப்பாளர்கள் திரு. G.P.கார்த்திகேயன், திரு. V.கார்த்திகேயன், திரு. V.A.கணேஷ், திரு. R.கல்யாண், திரு. V.பிரதீப், திரு. A.சோபன்பாபு, திரு. C.மணிகண்டன், நகரச் செயலாளர்கள் திரு. முகமது இப்ராஹிம், திரு. B.கமாலுதீன், ஒன்றியச் செயலாளர்கள் திரு. K.G.சரவணன், திரு. V.R.பழனிசாமி, திரு. A D.பிரகாஷ், நற்பணி அணி ஒன்றிய அமைப்பாளர் திரு. S.விஜயராஜ், திருமதி. V.அமுதா, திரு. ராஜா, நகர வட்டச் செயலாளர் திரு. A.சிவக்குமார், நற்பணி அணி பேரூராட்சி அமைப்பாளர் திரு. K.வேலுச்சாமி, கலிங்கியம் ஊராட்சி செயலாளர் திரு. குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MNM8THYEAR
#மநீம8ம்ஆண்டு

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1894659640685990348
 
Facebook: https://www.facebook.com/share/p/18irME1SSJ/

Instagram: https://www.instagram.com/p/DGh1UnEoyZg/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post