ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தலைவர் திரு . கமல்ஹாசன் , ஜனவரி 25, 2023 அன்று , தாம் காங்கிரசுக்கு ' நிபந்தனையற்ற ஆதரவு ' அளிப்பதாகத் தெரிவித்தார்.
பிரிவினைவாத சக்திகளைத் தமிழ்நாட்டிற்குள் எக்காரணம் கொண்டும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணமே , இந்த இடைத் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கக் காரணம் என்று திரு . கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டார்.
”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு" - தலைவர் திரு கமல்ஹாசன் அறிவிப்பு”
ஈரோடு கிழக்கு இடைதேர்தல் ”கூட்டணிக்கு ஆதரவு ஆனால் நிரந்தரமில்லை” - தலைவர் கமல்ஹாசன்
இந்த இடைத்தேர்தல் சமீபத்திய நிகழ்வுகள் கீழே
இடைத்தேர்தல் பிரச்சாரம்
பிப்ரவரி 19, 2023
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம்
தலைவர் கீச்சு - பிப் 19 ஈரோட்டில் பரப்புரை!
பிப்ரவரி 18, 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் @EVKSElangovan அவர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள நாளை ஈரோடு வருகிறேன். ஒன்று கூடுவோம். வென்று காட்டுவோம். #ErodeByElection!
என் பயணம் புரிந்தால் என் பாதை தெரியும் - தலைவர் அவர்கள் மதவாத சக்திகளை எதிர்க்க ஈரோட்டில் பரப்புரை!
பிப்ரவரி 18, 2023
ஈரோடு கிழக்கில் நம்மவர் பரப்புரை!
மய்ய உறவுகள் பிரச்சாரத்தை துவங்கினர்.
பிப்ரவரி 17, 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் @INCTamilNadu வேட்பாளர் @EVKSElangovan அவர்களை ஆதரித்து, கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் @Arunachalam_Adv அவர்கள் தலைமையில் இன்று காந்திஜி சாலை & நேதாஜி சாலை பகுதியில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோட்டிற்கு வருகிறார் நம்மவர்
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன்
அவர்களின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரை பயணம் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி.
பிரச்சாரம் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
பிப்ரவரி 15, 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திரு. @EVKSElangovan அவர்களை ஆதரித்து வரும் பிப்ரவரி 19 (ஞாயிறு) அன்று தலைவர் நம்மவர் டாக்டர். திரு. கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோட்டில் தேர்தல் பொறுப்பாளர் திரு. @Arunachalam_Adv அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் திரு. @Thangavelukovai அவர்கள், மாநிலச் செயலாளர்கள் டாக்டர். மயில்சாமி அவர்கள், திருமதி.@mookambika_rath அவர்கள், திருமதி. @DrAnusharavi அவர்கள் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தலைவர் பிரச்சாரம் - பொறுப்பாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்
பிப்ரவரி 14, 2023
காங்கிரஸ் வேட்பாளர் திரு. @EVKSElangovan அவர்களை ஆதரித்து நம்மவர், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோட்டில் பரப்புரை செய்யவிருக்கிறார். நமது தலைவரின் வருகை மற்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள துணைத் தலைவர்கள் @MouryaMNM, @Thangavelukovai அவர்களின் பரிந்துரையின்படி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கி தலைவரின் பரப்புரை சிறப்புற அமைய பங்களிப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள், @Arunachalam_Adv ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்.
#MakkalNeedhiMaiam #KamalHaasan
தலைவர் பரப்புரை விவரம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. @ikamalhaasan
அவர்கள் ஈரோடு-கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான திரு. @EVKSElangovan
அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம்!
#MakkalNeedhiMaiam #KamalHaasan
தலைவர் திரு . கமல்ஹாசன் காங்கிரசுக்கு ' நிபந்தனையற்ற ஆதரவு ' அளிப்பதாகத் தெரிவித்தார்
ஜனவரி 25, 2023
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில், திரு. கமல்ஹாசன்அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்போடு , ஜனவரி 23, 2023 அன்று , திரு . இளங்கோவன் அவர்களும் , காங்கிரசின் முக்கிய நிர்வாகிகளும் , மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் திரு . கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரினர் .
இதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்தத் தலைவர் திரு . கமல்ஹாசன் , ஜனவரி 25, 2023 அன்று , தாம் காங்கிரசுக்கு ' நிபந்தனையற்ற ஆதரவு ' அளிப்பதாகத் தெரிவித்தார்.
பிரிவினைவாத சக்திகளைத் தமிழ்நாட்டிற்குள் எக்காரணம் கொண்டும் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணமே , இந்த இடைத் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கக் காரணம் என்று திரு . கமல்ஹாசன் அவர்கள் குறிப்பிட்டார்