மக்கள் நீதி மய்யம் சார்பில் கொளத்தூரில் மாபெரும் கண் சிகிச்சை முகாம், நீர், மோர் பந்தல், மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்பேரில், கொளத்தூர் மநீம மாவட்டம் சார்பில் குமரன் நகர் அஞ்சல் அலுவலகம் மற்றும் ரமணா நகரில் M.K.விஷன் கேர் மற்றும் ஐ கேர் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாம்களுக்கு கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா (IPS) Retd, நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் திரு. C.கோமகன் முன்னிலையில், நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமானோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனை, சிகிச்சைகள் வழங்கப்பட்டதுடன், 56 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு நீர்மோர், ரோஸ் மில்க், பாதாம் மில்க் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. மேலும், கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளர் திரு. கெனி ஜான் டிக்ரோஸ், நகரச் செயலாளர்கள் திரு. ராஜேந்திரன், திரு. J.நாகேஸ்வராவ், திரு.T.R.சதீஷ்குமார், வட்டச் செயலாளர்கள் திரு. பிலாய்டு டிக்ருஸ், திரு. A.S.M.ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கட்சியின் மாநில இணைச் செயலாளர் டாக்டர். M.K.S.சுரேஷ், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. Er.P.சரவணகுமார், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையில் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஜிம் மாடசாமி, மாவட்டச் செயலாளர்கள் திரு. D.மாறன், திரு. கோவிந்தராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1912734900190605759
Facebook: https://www.facebook.com/share/p/18HKGDDqz4/
Instagram: https://www.instagram.com/p/DIiQ_bSJTFF/?utm_source=ig_web_copy_link