மநீம சார்பாக 60 குழுக்கள் கலந்துகொண்ட மாபெரும் கிரிக்கெட் போட்டி.

18 ஜூலை, 2023

                `

​மக்கள்‌ நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியினை துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS (Rtd) மற்றும் மாநில செயலாளர் பொறியாளர் அணி திரு.S.R.வைத்தீஸ்வரன் அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் கட்டமைப்பு திரு. சிவ இளங்கோ அவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் தொழில் முனைவோர் அணி திரு.மயில்வாகனன் அவர்கள் காஞ்சி மண்டல விவசாய அணி அமைப்பாளர் திரு.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டனர். 16-7-2023 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியினை மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள் துவக்கி வைத்தார் 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த BRCC பிரதர்ஸ் அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர், முதல் பரிசு பெற்ற அணிக்கு காஞ்சி மண்டல பொறியாளர் அமைப்பாளர் திருE.T.அரவிந்ராஜ் அவர்கள் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், கோப்பைகளும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

மேலும் இரண்டாம் இடம் பிடித்த செய்யாரை சேர்ந்த WORLD STAR அணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மூன்றாம் பரிசு பெற்ற அணிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.கோகுல கிருஷ்ணன் அவர்கள் பத்தாயிரம் ரூபாயும் கோப்பையும் வழங்கினார்.
நான்காம் இடம் பிடித்த அணிக்கு மாவட்ட துணை அமைப்பாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள் பத்தாயிரம் ரூபாயும், கோப்பைகளை வழங்கினார்.

மேலும் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகனுக்கு மாநிலச் செயலாளர் பொறியாளர் அணி திரு.வைத்தீஸ்வரன் அவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினார்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1681314488748998659?t=I4chMNTn8ioEaORQY9t51A&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mmL4h7hsi8K54guHrZzDzyW5tw1AyvhL56ayf7FXgtWYhRS7yieeyBTxgsv5ynJGl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Cu173JDJ2I7/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post