மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தலைமையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் 23-08-2024 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளை செம்மைப்படுத்தும் வகையில், விதிமுறைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள கட்சி நிர்வாகக் குழுவுக்கு முழுப் பொறுப்பு வழங்கப்பட்டது.
மேலும், `நம்மவர் நூலகம்' உருவாக்கத்தில் பங்களித்த நிர்வாகிகளுக்குப் பாராட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட முயற்சித்த தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு மற்றும் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தல், மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அளித்தல், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, உரிய திட்டங்களைச் செயல்படுத்தல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க கடும் சட்டங்களைக் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கிடையே சிறப்புரை ஆற்றினார்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1826939077339513102
Facebook: https://www.facebook.com/share/p/7SEwRLEBUANWEdKc/
Instagram: https://www.instagram.com/p/C_ApzoHvRsc/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==