அனைவருக்கும், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டப் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மக்கள் நீதி மய்யம் தொண்டர்களைப் பொருத்தவரை உதவிக்கு வா! என ஆளனுப்பி அழைத்து வரவேண்டியதில்லை. சமுதாயப் பணிகள் அவர்களது வாழ்வில் ஓர் அங்கம். ‘தேடி தீர்ப்போம் வா’ என்று உதவும் உள்ளம் படைத்தவர்கள்.
முதற்கட்டமாக, தூத்துக்குடி பகுதிகளில் உள்ள மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மூலமாக ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை திருநெல்வேலி மண்டலச் செயலாளர் டாக்டர். பிரேம்நாத் முன்னின்று ஒருங்கிணைத்தார்.
தற்போது, லயன்ஸ் இண்டர்நேசனல் (மாவட்டம் 324 M) உடன் இணைந்து 22 டன் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநிலச் செயலாளரான திரு. எம்.ஶ்ரீதர், லயன்ஸ் கிளப்புடன் ஒருங்கிணைத்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்களைத் திரட்டித் தந்திருக்கிறார்.
அவருக்கு என் பாராட்டுகள்.
இவர்களோடு,
மக்கள் நீதி மய்யம், கோயம்புத்தூர் மண்டலம்
மகளிரணி, மக்கள் நீதி மய்யம்
பெங்களூர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்
மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் நிவாரணப் பொருட்களைத் திரட்டி தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
சென்னை வெள்ளச் சேதத்தின்போது மனித நேயத்துடன் களமிறங்கி உதவிக்கரம் நீட்டியவர்கள், இப்போது தென்மாவட்டங்களுக்கும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று லாரிகள் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும். உதவி தேவைப்படும் சூழ்நிலையில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் சேர்ப்பிக்கப்படும்.
இங்கே குழுமியிருக்கும் ஊடகவியலாளர்களுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுக்கும் மீண்டும் ஒருமுறை எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2024 சிறப்பாக அமையட்டும்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1741812895586103738?t=h3QZGH38nF0sDc3cuRW-Dg&s=19
Facebook: https://www.facebook.com/share/p/Fe1uk1a32W2MCUHe/?mibextid=qi2Omg
Instagram: https://www.instagram.com/p/C1jyoxmJJfm/?igsh=amRjZTh6eWl0Y2Yy