வணக்கம்
இன்று (14.06.2024) காலை 11:30 மணியளவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திரு. விஜய் வசந்த் அவர்களும், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, வழக்கறிஞர் திருமதி. சுதா அவர்களும், தலைவர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் திரு. எம்.எஸ்.காமராஜ், திரு. எம்.ஜி.ராமசாமி, திரு. தணிகாசலம், திரு. சின்னராஜா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS(Rtd) அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A., B.L அவர்களும் உடனிருந்தனர்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
in அறிக்கைகள்