மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக விருதுநகரில் இரத்த தான முகாம்…
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்ட மநீம சார்பில் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, சுரேஷ் மஹாலில் 8வது ஆண்டு இரத்த தானம் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் திரு. J.காளிதாஸ், நகரச் செயலாளர் திரு. M.கமல் கண்ணன் தலைமையில், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. நடராஜன், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. நெல்சன் தாஸ், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் திரு. பன்னீர் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.
தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர்செல்வம், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. R.லஷ்மன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. P.S.சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. R.ஜெகன், திரு. பஜார் T.பிரசாத், திரு. சுப்பிரமணியன், திரு. ஸ்ரீதர், சமூக ஊடக அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. மூர்த்தி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல் பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இரத்த தானம் அளித்தவர்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1866121079795937743
Facebook: https://www.facebook.com/share/p/19WHjqmRQ4/
Instagram: https://www.instagram.com/p/DDXDeEWPNp6/?utm_source=ig_web_copy_link