மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி 24, 26-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) களப் பணி நடைபெற்றது. கட்சியின் சிங்காநல்லூர் மாவட்டச் செயலாளர் திரு. மயில் K.கணேஷ் தலைமையில் நடைபெற்ற களப் பணிக்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் சௌந்தரராஜன் செய்திருந்தார்.
கோவை தண்ணீர் பந்தல் ரவுண்டானா பகுதியில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் டைடல் பார்க் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மேம்பாலப் பணிகளை கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அதேபோல, அப்பகுதியில் தெரு வாரியாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி, அவற்றுக்குத் தீர்வுகாண்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் மாநகரச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சிவக்குமார், திருமதி தனலட்சுமி, திரு. கமல், மாவட்ட துணை அமைப்பாளர் திருமதி. மணிமொழி, மாநகரப் பொருளாளர் திரு. சிவசண்முகம் மாநகர அமைப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் திரு. கமல் தேவராஜ், திரு. மோகன், இளைஞரணி அமைப்பாளர்கள் திரு. பிரபாகரன், திரு. தாமோதரன் மற்றும் திரு. லோகநாதன், திரு. கமல் உதயன், திரு. விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று களப் பணியாற்றினர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1904477606583705925
Facebook: https://www.facebook.com/share/p/1H5TuTZPp8/
Instagram: https://www.instagram.com/p/DHnmA20pr3z/?utm_source=ig_web_copy_link