பேருந்து ஓட்டும் வேலை இழந்த பெண் ஓட்டுநருக்கு கார் கொடுத்து தொழில்முனைவோர் ஆக்கிய நம்மவர்!

26 ஜூன், 2023

                `

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். 

தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. 

கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் நான்,
கமல்ஹாசன். 

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1673227084817399810?t=J0AYt5dK3MjU873vDUPlpQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035Zu44HXxFx47bhbnoYSzLFQxgYNVQ1tzT7X7HMemYQkURKwXfvwRVoVUnE8F6iEXl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Ct8diBSJYUC/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post