ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்தபோது திமுகவின் பொருளாளராக இருந்த இன்றைய முதல்வர் மாண்புமிகு திரு. @mkstalin அவர்கள் விரிவான இரங்கல் அறிக்கை வெளியிட்டதுடன், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தன்னைத் தந்து மண்ணைக் காத்த மகத்தான தமிழன் மேஜர் முகுந்த் வரதராஜனின் சரிதை திரைப்படமாக வெளியாகும்போது தன்னுடைய நேர நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அந்த மாவீரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாண்புமிகு முதலமைச்சரும், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களும் #amaran திரைப்படத்தை கண்டு ரசித்ததுடன் படத்தின் தயாரிப்பாளர்களான திரு. @ikamalhaasan, திரு. #RMahendran, இயக்குனர் @Rajkumar_KP, கதாநாயகன் @Siva_Kartikeyan, கதாநாயகி @Sai_Pallavi92, இசையமைப்பாளர் @gvprakash ஆகியோரை மனதாரப் பாராட்டியமைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக எங்களது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
@RKFI @turmericmediaTM
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1851860614765027347