ஒவ்வொரு ஊரிலும் படிப்பகங்களை தொடங்க வேண்டும் என்ற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'நம்மவர் படிப்பகம்' திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.
கமல் பண்பாட்டு மையம் மற்றும் வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் டிஜிட்டல் நூலகத்துடன் கூடிய, திறன் மேம்பாட்டு மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பகத்தை, கமல் பண்பாட்டு மைய அறங்காவலர்கள் திரு. நாராயணன் வள்ளியப்பன், திரு. E.அக்பர் அலி, வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. வெங்க்கி ரங்கநாதன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இந்த நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு, பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், தலைமை நிலைய மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், நெல்லை மண்டலச் செயலாளர் டாக்டர் D.பிரேம்நாத், மதுரை மண்டலச் செயலாளர் திரு. M.அழகர், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் திரு. S.வைத்தீஸ்வரன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர் செல்வம், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. R. லஷ்மன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் நெல்லை மண்டல அமைப்பாளர்கள், பொறியாளர் அணி அமைப்பாளர் திரு. A.ஜிம்மி பான்சன், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி அமைப்பாளர் திரு. A.யோகேஷ், சமூக ஊடக அணி அமைப்பாளர் திரு. S.மூர்த்தி சிவா, விவசாய அணி அமைப்பாளர் திரு. B. பிரேம்குமார் பர்னா, இளைஞர் அணி அமைப்பாளர் திரு. M.கணேஷ்குமார், மகளிர் அணி அமைப்பாளர் திருமதி. D.செல்வி, தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு. M.K. ராஜன், மாவட்டச் செயலாளர்கள் திரு. T.செல்வகுமார், திரு. S.சரவணக்குமார், திரு. B.சசி ஜெயபிரகாஷ், திரு. S.முகுந்தன், திரு. P.குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1884994912242061364
Facebook: https://www.facebook.com/share/p/1HWVxiKotZ/
Instagram: https://www.instagram.com/p/DFdK7dHvgEz/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==