மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் எண்ணத்தின் செயலாக்கமாய், கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநிலத் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் தலைமையில், கோவை மண்டலச் செயலாளர் திரு. A.ரங்கநாதன் அவர்கள் முன்னிலையில் நேற்று மாலை கோயம்புத்தூரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம், அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் 8-வது ஆண்டு விழாவை கோவை மண்டலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்வில் விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு. G.மயில்சாமி, நற்பணி அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. முகமது சித்திக், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு கோவை மண்டல அமைப்பாளர் திரு. செவ்வேள், சமூக ஊடக அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன், பயிற்சி பட்டறை அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு (கோவை தெற்கு), திரு. சிட்கோ சிவா (கிணத்துக்கடவு), திரு. ஜீவா (திருப்பூர் வடக்கு), திரு. சிவக்குமார் (கோபிச்செட்டிப்பாளையம்), திரு. ராஜா முகமது (தாராபுரம்), திரு. மயில் கணேஷ் (சிங்காநல்லூர்), திரு. மனோகர் (கவுண்டம்பாளையம்), திரு. மோகன்ராஜ் (தொண்டாமுத்தூர்), திரு. தனவேந்திரன் (கோவை வடக்கு), திரு. வரதராஜ் (சூலூர்), திரு. முஜிபுர் ரஹ்மான் (வால்பாறை), திரு. மகேந்திரன் (திருப்பூர் தெற்கு), திரு. குரு (உடுமலை), திரு. நயினார் (பவானி), திரு. சசிகுமார் (மொடக்குறிச்சி), திரு. முரளி (ஈரோடு மேற்கு), திரு. முருகன் (பெருந்துறை), திரு. ஜாகிர் உசேன் (உதகை), திரு. சித்திக் (குன்னூர்) மற்றும் திரு.ரசூல்கான், திரு.மெஹ்ரூபா (மேட்டுப்பாளையம்), திரு. இளங்கோ, திரு. தண்டபாணி (அவிநாசி) உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் திரு. சத்தியநாராயணன், திரு. சிராஜ், திரு. மணிக்கொடி, திரு.கார்த்திக், திரு.பூபதி, திரு.ஜெய்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1888185354471248083
Instagram: https://www.instagram.com/p/DFz1JAeJCwS/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==