மக்கள் நீதி மய்யம் கட்சி மகளிர் அணியின் மாநிலம் தழுவிய ஆலோசனைக் கூட்டத்தின் முதற்கட்டமாக, திருச்சி மண்டலத்தில் மகளிரணி நிர்வாகிகள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம்...
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் ஆசியுடன், மாநில நிர்வாகிகள் அறிவுறுத்தலின்பேரில், கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் திருச்சி மண்டலத்தில் தொடங்கின.
கட்சியின் மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா இரத்தினம் அவர்களின் முன்னெடுப்பில், திருச்சி மண்டலச் செயலாளர் திரு. M.N.ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்பாட்டில், துறையூர், முசிறி, பெரம்பலூர், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 4 இடங்களில், இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
கட்சிக் கொடியேற்றத்துடன் துவங்கிய இக்கூட்டங்களில் மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா இரத்தினம், திருச்சி மண்டலச் செயலாளர் திரு. M.N.ரவிச்சந்திரன், மாணவர் அணி மண்டல அமைப்பாளர் திரு. உமாசங்கர்,
மாவட்டச் செயலாளர்கள் திரு. சாம்சன், திரு. கண்னன், திரு. எம்.செய்யது அனஸ், திரு. ரங்கசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் திரு. தியாகராஜன்,
மகளிரணி மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி. லலிதா, திருமதி அனுராதா, திருமதி. கலைவாணி, திருமதி.சுஜாதா, திருமதி. சுபா மூர்த்தி,
தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. செய்யது சாகிப், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. ராம் பிரசாந்த், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ஓம்பிரகாஷ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திரு. மகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி திரு. கார்த்திக் ராஜ், மாவட்டப் பொருளாளர் திரு. பி.தனபாலன், ஒன்றியச் செயலாளர்கள் திரு. எம்.இளங்கோ, திரு. ஜி.பிரான்சிஸ், திரு. அருள்,
நிர்வாகிகள் திரு. அருள் செல்வன், திரு. கோபிநாத், திரு. ஜோதி, திருமதி. சுமேஷ், திரு. தர்மா சரவணன், திரு. மூர்த்தி, திரு. மனோகர், திரு. உமா சங்கர், திரு. சூர்யபிரகாஷ், திரு. அன்பு, திரு. மணி சங்கர், திருமதி ரேகா, திரு. நவாஸ் சாகிப், திரு. சுரேந்தர், திரு. விஜி, திரு. மணி, திரு. ரூபகுமார், திரு. ரஹ்மத்துல்லாஹ், திரு. சிவப்பாத சேகர், திருமதி. மாலினி, திருமதி. போதும் பொண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டங்களில் கட்சியின் மகளிரணியை வலுப்படுத்துவது, மகளிரணியில் அதிக எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், பொதுத் தேர்தல்களில் பங்கேற்பது, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1866117437823045746
Facebook: https://www.facebook.com/share/p/1Xkvfj8HUR/
Instagram: https://www.instagram.com/p/DDXCNgNPmPF/?utm_source=ig_web_copy_link