மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக , சிவகாசி அரசு மருத்துவமனையில் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை, மாநில துணைத் தலைவர் திரு. R.தங்கவேல் அவர்கள், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் அவர்கள், மாநில இளைஞரணிச் செயலாளர் கவிஞர். சினேகன் அவர்கள் தொடங்கிவைத்தனர்.
இதில், 400-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக சிவகாசி எம்.எல்.ஏ திரு. அசோகன் அவர்கள், மாநகராட்சி மேயர் திருமதி. I.சங்கீதா இன்பம் அவர்கள் கலந்து கொண்டனர்.
நற்பணி அணி சிவகாசி மநீம மாவட்ட அமைப்பாளர் திரு. A.S.நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திரு. S.முகுந்தன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. மேலும், 500-க்கும் மேற்பட்ட முதியோருக்கு நலத்திட்ட உதவிகளும், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.
இதேபோல, விருதுநகர் மத்திய மாவட்ட கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிய அலுவலகத் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் திரு. A.S.நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் திரு. R.தங்கவேல் அவர்கள் தொழிற்சங்கப் பேரவை கொடியேற்றிவைத்து, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜ், தொழில்முனைவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. P.பன்னீர்செல்வம்,
பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் திரு.வைத்தீஸ்வரன், தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், தொழிற்சங்கப் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.P.S.சரவணன், திருமதி. பானுமதி, தொழிற்சங்கப் பேரவை மாநில துணைச் செயலாளர் திரு.புகழ்முருகன், தொழிற்சங்கப் பேரவை மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. T. பிரசாத், திரு. R.ஜெகன், திரு. பாலசுப்பிரமணியன், திரு.ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#NTSP
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1861395699147194616
Facebook: https://www.facebook.com/share/p/14zRvPRTt1/
Instagram: https://www.instagram.com/p/DC1exyyP-Ge/?utm_source=ig_web_copy_link