இலட்சியக் கனவை நோக்கி வீறுநடைபோடுங்கள்!
மாணவர்கள், நாட்டு நடப்பை கூர்ந்து கவனித்து ஜனநாயகம் காக்க வாரீர்!
லயோலா கல்லூரி விழாவில் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் எழுச்சியுரை!
இன்று (23-09-2023) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாணவர் விழாவில் நமது தலைவர் நம்மவர் அவர்கள் உரையாற்றினார்.
ஜனநாயகத்தின் முக்கியத்துவம், அதைக் காப்பதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசிய தலைவர் அவர்கள், மாணவர்கள் ஒவ்வொருவரும் பெரியதொரு இலட்சியத்தை மனதில்கொண்டு அதைநோக்கி வீறுநடை போடவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தன்னைச் செதுக்கிச் செழுமைப்படுத்திய தனது பெற்றோர், ஆசிரியர்களை நினைவுகூர்ந்த தலைவர் தனது கலைப்பயணத்தில் எதிர்கொண்ட சோதனைகள், அதை எதிர்கொண்ட விதம் பற்றிக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அரசியல் என்பதால் நாட்டு நடப்பை மாணவர்கள் கூர்ந்து கவனித்து அவசியம் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியல் ஈடுபாடு என்பது வேலைக்கு இடையூறாக இருக்குமோ என்று அஞ்சுவதை விடுத்து, நாட்டில் நல்ல அரசியல் இருந்தால்தான் சிறப்பான வேலைவாய்ப்பு-எதிர்காலம் கிடைக்கும் என்ற பார்வையில் அரசியலை அணுகவேண்டும் என்று தலைவர் பேசியதை மாணவர்கள் ரசித்து வரவேற்றனர்.
பல்லாயிரக்கணக்கில் குழுமியிருந்த மாணவர்களை நோக்கி "நீங்கள் ஒவ்வொருவரும் சாதிக்கவேண்டும்" என்று வாழ்த்தி விடைபெற்றார் தலைவர் நம்மவர்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1705622321862770815?t=pMv5gG8WWMYZZUCqF2r9LQ&s=19
Instagram: https://www.instagram.com/p/CxipX4Jp2ci/?igshid=MmU2YjMzNjRlOQ==