நம்மவர் தொழிற்சங்கப் பேரவை முப்பெரும் விழா
(20.10.2024)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிரந்தர ஆலோசகருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன், துவக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 4ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், 5ம் ஆண்டு பேரவை துவக்க விழா மற்றும் பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் புதிய அலுவலகத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் M.A.,B.L., அவர்கள் திறந்து வைத்தார்.
நம்மவர் தொழிற்சங்கப் பேரவைக் கொடியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா I.P.S (Rtd) அவர்கள் ஏற்றி வைத்தார்.
நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 4ம் ஆண்டு பொதுக்குழு கூட்டமானது, பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் அவர்களின் தலைமையில், பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. V.ரவிச்சந்திரன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K.மாடசாமி, மாநில துணைச் செயலாளர் திரு. M.K.ராஜன் ஆகியோரின் முன்னிலையில், பேரவை நிர்வாகிகள் அனைவரின் பங்கேற்போடு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 5ம் ஆண்டு பேரவை துவக்க விழாவானது, பேரவையின் பொதுச் செயலாளர் திரு. V.ரவிச்சந்திரன் அவர்களின் வரவேற்புரையுடன், பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் அவர்களின் தலைமையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு திரு. A.G. மௌரியா IPS (Rtd), பொதுச் செயலாளர் திரு ஆ.அருணாச்சலம் M.A.,B.L.,, ஆகியோரின் முன்னிலையில், மாநில செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. G.நாகராஜன், திரு. S.வைத்தீஸ்வரன் திருமதி. சினேகா மோகன்தாஸ், மாநில துணைச் செயலாளர் திரு. P.S.ராஜன், தொழில்முனைவோர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மயில்வாகனன் தணிகைவேல், மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும், பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு.V.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர் திருமதி.M.பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள், திரு.K.மாடசாமி, திரு.P.குணசேகரன், திரு.B.மாணிக்கராஜ், திரு.G.ரவிச்சந்திரன், திரு.P.S.சரவணன், திருமதி.A.பானுமதி, மாநில துணைச் செயலாளர்கள் திரு.M.K.ராஜன், திரு.A.ராஜூ, திருமதி.S.சாந்தி, திரு.M.புகழ் முருகன், திரு.D.சங்கர், திரு.V.யுவராஜ், திரு.R.கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.V.வெனின், திரு.S.ரமேஷ், திரு.R.ஜெகன், திரு.D.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.
நடைபெற்ற பேரவையின் 4ம் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (அக். 20) நடைபெற்ற நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 4-ம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
1. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக நம்மவர் உயர்திரு. கமல் ஹாசன் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக, நம்மவர் தொழிற்சங்கப் பேரவை சார்பில் பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது
2. தலைவர் ஆலோசனையின்படி 234 தொகுதிகளிலும் விரைந்து தொழிற்சங்கங்களை ஏற்படுத்தி பேரவையுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
3. அரசு மற்றும் தனியார் துறைகளில், துறை வாரியாக தொழிற்சங்கங்களை துவக்க, முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
4. அமைப்பு சாரா தொழிலாளர்களை, தொழில் வாரியாக ஒருங்கிணைத்து தொழிற்சங்கங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை இந்த பொதுக்குழு வேண்டிக்கொள்கிறது.
5. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகள், சலுகைகளை பெற்று வழங்க வேண்டும் என்பதை இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
6. மய்யம் ICF தொழிற்சங்கத்தின் சார்பாக, இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையான ICFயில் அதிகமான காலிப் பணியிடங்கள் இருந்தும், நிரப்பப்படாமல் உள்ள நிலையில், தொழிலாளர்களின் பணிச்சுமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது, பதவி உயர்வு என்பது காலதாமதம் ஆகிறது, உற்பத்தியின் இலக்கு மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. நிரந்தர தொழிலாளர்களை நியமிக்காமல் ஒப்பந்தப் பணியாளர்களை வைத்து நேரடியாக, முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருவது, பயணிகள் பாதுகாப்பை கோள்விக்குறியாக்குகிறது. எனவே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பதில், நிரந்தர பணியாளர்களை, பணிநியமனம் செய்ய வேண்டும் என்று இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
7. நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் நிரந்தர சிறப்பு ஆலோசகர் நம்மவர் உயர்திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 7, 2024) தமிழகம் முழுவதும் பேரவையின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பதை இந்த பொதுக்குழு தீர்மானிக்கிறது.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
in அறிக்கைகள்