மக்கள் நீதி மய்யமானது தொடங்கிய காலந்தொட்டே ‘‘கிராம சுயாட்சியின்” முக்கியத்துவத்தை வலியுறுத்திவருகிறது. மாதிரி கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவது, “கிராம சபைக்” கூட்டங்களில் தானே நேரடியாகப் பங்கேற்பது, கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் சமூகத்தின் பழுதுபோக்கும் விதமாக உள்ளாட்சி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மநீம நிர்வாகிகளை கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கச் செய்வது என பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளின் மூலம் ஜனநாயகத்தின் வேரை வலுவாக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்துவருபவர் தலைவர் கமல் ஹாசன் அவர்கள்.
அடித்தட்டு மக்களை அதிகாரப்படுத்தி, ஜனநாயகத்தை கடைக்கோடி கிராம மக்களிடம் கொண்டுசேர்க்கும் பஞ்சாயத்து அமைப்புகள் 73வது திருத்தத்தின் மூலம் அரசியல் சாசன அங்கீகாரம் பெற்றதை நினைவுகூறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று(ஏப்ரல் 24,) தலைவரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க மக்கள் நீதி மய்யமானது தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியேற்கிறது.
மேலும் இந்த பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று, மத்திய அரசானது உள்ளாட்சி அமைப்புகள் செய்யவேண்டிய அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் தன்னை முன்னிறுத்த முனையாமல் மாநில அரசுகளுக்கு உரிய நிதியினை வழங்கி அவர்களின் மூலம் இப்பணிகளைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அதேபோல் கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது; இத்தீர்மானங்களை குறித்த காலத்திற்குள் செயல்படுத்த வழிவகை செய்வது; தீர்மானங்களைச் செயல்படுத்த பஞ்சாயத்து அமைப்புகளுக்கு போதிய நிதி ஆதாரம் மற்றும் அதிகாரங்களை வழங்குவது போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவது குறித்தும் தமிழக அரசானது பரிசீலிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோருகிறது.
- சிவ இளங்கோ
மாநில செயலாளர் - கட்டமைப்பு
மக்கள் நீதி மய்யம்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1650513547749621761?t=vZnthaDb_SlmqPstFDUCZg&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid025SDfcoWY27NS9Gp5eVJsH4E9StkPCjec9NHjg5g1FnxP5vAUT6fqkEuF5sYdJJDVl&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/CrbEtqlvkWK/?igshid=YmMyMTA2M2Y=