ஒரு பண்டைய நாகரீகத்தை, அதன் காலனிய உறக்கத்திலிருந்து எழுப்ப, வேண்டும் என்ற ஏக்கத்தோடு தனது மெல்லியத் தோள்களில் சுமந்தவர். அனைத்து உள்ளங்களிலும் பொதிந்திருந்த சுதந்திர தாகத்தை ஒரு சமூக சக்தியாக மாற்றியவர்.
மோஹன்தாஸ் கரமச்சந்த் காந்தி என்ற ஒரு சகாப்தத்திற்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால், அனைத்து நாடுகளுக்கும் ஒருவரை ஒருவர் தோற்கடிக்க, அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழிமுறை, போர்.
மனித வரலாற்றையே மாற்றி, ஒரு மாபெரும் சக்தியை அஹிம்சையாலும், மக்கள் சக்தியாலும் தோற்கடித்தார்.
பிரசங்கம் செய்யப்படாத அவரது உண்மை, மக்களால் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. அவரது கொள்கைகளை அவர் போதிக்கவில்லை; வாழ்ந்து காட்டினார்.
நேர்மையாளர்களும், தார்மீக சுதந்திரவாதிகளும் இருக்கும் வரை, மனதில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கும் வரை காந்தியை மறவார்.
#GandhiJayanti
Social Media Link
Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1708679544054726723?t=xkZSwkzkIBZFil7u2cPs4A&s=19