தமிழில் இருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சில் இருந்து தமிழுக்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரும், இருமொழிகளையும் பலருக்கும் பயிற்றுவித்தவருமான எழுத்தாளர் ச. மதனகல்யாணி நேற்று காலமாகிவிட்டார் என்கிற செய்தி அறிந்தேன்.
கேம்யூஸ் எழுதிய கொள்ளை நோய், பால்சாக்கின் தந்தை கோரியோ உள்ளிட்ட புகழ்மிக்க நூல்கள் இவரது மொழியாக்கத்தால் தமிழுக்குக் கிடைத்தன. நமது சிலப்பதிகாரம், நாட்டுப்புறப் பாடல்கள், பாரதியார் பாடல்கள் தொடங்கி சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ வரை பல முக்கியமான ஆக்கங்களை பிரெஞ்சு சூழலுக்குக் கொண்டு சேர்த்தார். ஒபிசியே, செவாலியே உள்பட பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர்.
தமிழுக்குத் தொண்டு செய்து மறைந்த மதனகல்யாணி அவர்களைப் பணிந்து அஞ்சலி செலுத்துகிறேன்.
social Media Link
Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1657050577262768128?s=20