இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பு மணிரத்தினம் அவர்களே - தலைவர் கமல் ஹாசன்.

2 ஜூன், 2023

                `

ஒருவருடைய வாழ்க்கையை அவரை சுற்றி அவர்கள் உருவாக்கும் மகிழ்ச்சியைக் கொண்டும் , ஒருவருடைய வயதை அவரை சுற்றியுள்ள நண்பர்களைக் கொண்டும் கணக்கிட்டால் , என் அன்பு மணிரத்தினம் அவர்களே ! நீங்கள் மிகவும் மூப்படைந்தவர்! இந்திய சினிமாவின் மரியாதைக்குரியக் கலைஞர் , பல்லாயிரம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் நீங்கள்! 
சினிமாவில், வசனங்களுக்கு வேறு பரிமாணம் கொடுத்து ,அவற்றை உயரிய அனுபவங்களாக மாற்றியவர். 

தெறிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் சினிமாவின் எல்லைகளைத் துணிச்சலுடன் கடக்க முனைந்து, சவால்களை எதிர்கொண்டு , கற்றலைப் பருகிக் கொண்டிருக்கும் அதிசயம் நீங்கள் ! 

இன்று நீங்கள், இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் ! உங்கள் சகாப்தத்தை இளைய தலைமுறையினர் காலத்துக்கும் ஏந்திச் செல்வார்கள். நாயகன் தொடங்கி #KH234 வரை, உங்களுடன் நான் மேற்கொண்ட பயணம் சொல்லொண்ணா வெகுமதியையும் வளத்தையும் எனக்கு அளித்திருக்கிறது . இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துக்கள்!

Social Media Link

Twitter:  https://twitter.com/ikamalhaasan/status/1664491292896931840?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0JwPaym5HeFrS7WSDiVBR2hpf1v9Qgkphb2Y2Y8PAKNWqiVJVAhCPaiNWZ2TLDDi6l&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post