தமிழ்ப் பேராசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கிய பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் அவர்கள் இன்று மறைந்துவிட்டார்.
இந்தியாவில் தலித் சிந்தனைப் போக்கு எழுச்சி கொள்ளத் தொடங்கிய காலக்கட்டத்திலேயே தமிழகத்தில் அந்தக் கருத்தியலைப் பிரபலமாக்கிய முன்னோடியாகத் திகழ்ந்தார். தொடர்ந்து பண்பாட்டு ஆய்வில் தன் செயல்பாடுகளை முன்வைத்த அவரது, ‘தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு’, ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் வாசகப் பரப்பில் பரவலான கவனத்தைப் பெற்றன.
புனைவெழுத்திலும் தவிர்க்க முடியாத எழுத்தாளராகத் திகழ்ந்த ராஜ் கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்’, ‘காலச் சுமை போன்ற நாவல்கள் இலக்கிய வாசகர்களால் கொண்டாடப்பட்டன.
மொழியிலும் சமூக ஆய்விலும் இடையறாது இயங்கிவந்த அவரது இழப்பால் மனம் குன்றியிருக்கும் குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்து மனங்கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1856745869225103433?t=PM1huZta6f1NWfQ2_N-uQw&s=08